உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., கொடிகளை அகற்ற எச்சரிக்கை

தி.மு.க., கொடிகளை அகற்ற எச்சரிக்கை

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி அரசுப்பள்ளி ஓட்டுச்சாவடி, மருளையம்பாளையம் ஓட்டுச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி நேற்று ஆய்வு செய்ய வந்தார். அதே பகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி பிரசாரம் செய்ய வந்ததால், நைனாம்பட்டி அரசு பள்ளி ஓட்டுச்சாவடி முன், 200 மீட்டருக்குள் சாலை இருபுறமும், தி.மு.க., அதன் கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதை பார்த்த பிருந்தாதேவி அங்கிருந்த போலீசார், வருவாய்த்துறையினரிடம், 'ஓட்டுச்சாவடிக்கு முன் கொடி கம்பம் நட எப்படி அனுமதித்தீர்கள்?. உடனே அகற்ற வேண்டும்' என கூறி சென்றார். பின் கட்சிக்காரர்களிடம், போலீசார், வருவாய்த்துறையினர், கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை