உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீங்க ஜெயிச்சுடுவீங்க கேட்டால் அச்சம்

நீங்க ஜெயிச்சுடுவீங்க கேட்டால் அச்சம்

ஓமலுார், சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி அறிமுகக்கூட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதி, புளியம்பட்டியில் நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் செல்வகணபதி பேசுகையில், ''எல்லோரும் 'நீங்க ஜெயிச்சுடுவீங்க' என சொல்வதை பார்த்தால் பயமாக உள்ளது. மெத்தனப்போக்காக இருக்கக்கூடாது. தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வெற்றி பெற வேண்டும்,'' என்றார். மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, நகர செயலர் ரவி, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் ஓமலுார் தெற்கு, காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் அறிமுக கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை