உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஜினியரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

சேலம்: மகுடஞ்சாவடி அருகே வைகுந்தத்தை சேர்ந்த, 34 வயது வாலிபர், தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். அவர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது, அவரது டெலிகிராமுக்கு, கடந்த மார்ச், 10ல் ஆன்லைனில் பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்தது. அதில் இருந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசியபோது, பகுதி நேர வேலை குறித்து செயலியை ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த செயலிக்கான பணிகளை முடித்து அனுப்பிய நிலையில், இன்ஜினியரின் வங்கி கணக்குக்கு, 998 ரூபாய் சம்பளமாக வந்தது. பின் அந்த எண்ணில் மீண்டும் இன்ஜினியர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மர்ம நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார். அதை நம்பிய இன்ஜினியர், மார்ச், 20ல் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில், 6.64 லட்சம் ரூபாயை செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில், மர்ம நபரின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இன்ஜினியர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை