உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி

மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி

ஓமலுார்: கோவில் பண்டிகைக்காக, மூங்கில் மரம் வெட்டி கொண்டு வந்-தவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஓமலுார் அருகே சேவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணா-மலை, 59. தமிழ்நாடு மேக்னசைட் கம்பெனி லேப் டெக்னீ-சியன். மனைவி காளியம்மாள், 55. திருமணமான இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அண்ணாமலை நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பூமாரியம்மன் கோவில் பண்-டிகைக்காக, தோரணம் கட்டுவதற்கு காமலாபுரம் பெரிய ஏரியில், மூங்கில் மரம் வெட்டி வந்துள்ளார். அப்போது பச்சைமூங்கில் மரம், மின்சார கம்பியில் பட்டதால், அண்ணாமலை துாக்கி வீசப்-பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் விஸ்வ-நாதன், 35, அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை