உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் தேர் திருவிழா

மாரியம்மன் தேர் திருவிழா

மாரியம்மன் தேர் திருவிழாஆத்துார், ஆக. 22-ஆத்துார் அருகே கொத்தாம்பாடி மாரியம்மன், தீபசெல்லியம்மன், ஐயனார் கோவில்களில் கடந்த, 13ல் சக்தி அழைத்தலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு கிடா வெட்டுதல் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மாரியம்மன் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று மதியம், 3:00 மணிக்கு தீப செல்லியம்மன் தேர் திருவிழா நடக்கிறது.அதேபோல் ஆத்துார் அருகே கந்தசாமிபுதுார் மாரியம்மன் கோவிலில், கடந்த, 13ல் காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று தேரில், மாரியம்மன் சுவாமியை வைத்து மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள், தேரை இழுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ