உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நிறைவு

மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நிறைவு

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை, 31ல் கம்பம் நடுதலுடன் தொடங்கி-யது. நேற்று முன்தினம் வண்டி வேடிக்கை நடந்தது.நேற்று காலை உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் கொடி மரம் அருகே ஊஞ்சல் கட்டி அதில் அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிங்க வாக-னத்தில் அம்மனை எழுந்தருளச்செய்து மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் உப்பு, மிள-குகளை சுவாமி மீது துாவினர்.தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரையும் வண்ண பொடிகளையும் பூசி மகிழ்ந்து ஆடிய-படி முக்கிய வீதிகள் வழியே கோவில் வீட்டுக்கு அம்மனை அழைத்து சென்றனர். இத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெற்-றது. தேர் வெள்ளோட்ட விழாகெங்கவல்லி அருகே கடம்பூர், நடுவீதியில் ஊத்தங்கால் மாரி-யம்மன் கோவில் உள்ளது. அங்கு புதிதாக தேர் செய்யப்பட்டது. நேற்று அத்தேர் மீது கலசம் வைத்து வெள்ளோட்டம் விடும் விழா நடந்தது. முக்கிய வீதிகள் வழியே தேரை வடம் பிடித்து ஏராளமானோர் இழுத்துச்சென்றனர். அப்போது மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ