உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. அதற்கேற்ப கடந்த, 3ல் வினாடிக்கு, 77 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, 4ல், 89; 6ல், 239; 7ல், 529; 8ல், 853 கன அடி என அதிகரித்தது. ஆனால் நேற்று வினாடிக்கு, 656 கன அடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 44.17 அடி, நீர் இருப்பு, 14.33 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 2,100 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ