| ADDED : மே 02, 2024 12:04 PM
ஆத்துார்: ஆத்துார் அருகே கீரிப்பட்டி, மேல்தொம்பையை சேர்ந்தவர் ஜோதிவேல், 60. இவருக்கும், பக்கத்து காட்டு விவசாயி ராஜி, 74, என்பவருக்கும் இடையே வரப்பு ஓரம் உள்ள மரங்கள், விவசாய நிலத்தில் விழுவது தொடர்பாக அடிக்கடி பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஜோதிவேலுக்கு, பின் தலையில் அடிபட்டது. அவரது மனைவி லீலாவதியும் காயமடைந்தார். இவர்கள் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று மாலை ஜோதிவேல் உயிரிழந்தார். லீலாவதி புகாரில் கொலை மிரட்டல் உள்பட, 4 பிரிவுகளில் நேற்று முன்தினம், ராஜி, உறவினர்கள் அருள்மணி, வினோ, கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை ஆர்.ஐ., வெங்கடேஷ் ஆகியோர் மீது மல்லியக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் நேற்று, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில் அருள்மணி, 29, என்பவரை கைது செய்த போலீசார், ராஜி, வினோ, வெங்கடேஷ் ஆகியோரை தேடுகின்றனர். மேலும் ராஜி தரப்பினர் அளித்த புகாரிலும், 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.