உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடி கட்ட ஒரு தரப்பு ஆதரவு மற்றொரு தரப்பு எதிர்ப்பால் வாக்குவாதம்

அங்கன்வாடி கட்ட ஒரு தரப்பு ஆதரவு மற்றொரு தரப்பு எதிர்ப்பால் வாக்குவாதம்

சேலம்: சேலம், ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே, 'ரேடியோ அறை' என சொல்லப்படும் பழமையான கட்டடத்தில் அங்கன்வாடி செயல்பட்டது. அந்த கட்டடத்தை இடித்து புதிதாக அங்கன்வாடி கட்ட, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கி திட்ட மதிப்பீடு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், புது கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், 'அதே இடத்தில் புது கட்டடம் வேண்டாம். அந்த இடம் நீரோடை பகுதி. அதன் அருகே மின்மாற்றி, அபாய கிணறு உள்ளதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை' என கூறினர். மேலும் நேற்று நில அளவீடு செய்ய வந்த அலுவலர்களை அவர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மற்றொரு தரப்பினர், 'பல ஆண்டாக அங்கு தான் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அதே இடத்தில் புது கட்டடம் கட்டினால் தான் வசதியாக இருக்கும். சுயநலத்துக்கு சில குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' என, அப்பகுதியை சேர்ந்த சில பெற்றோர் கருத்து தெரிவித்தனர். இதில் இரு தரப்பினர் இடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரும்பாலை போலீசார் வரவழைக்கப்பட்டு, இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி