சேலம்: ''தமிழக அரசு ஐ.டி.ஐ., க்களில் கடந்த ஓராண்டில் படித்த, 2,700 மாணவர்களில், 2,300 பேருக்கு பல்வேறு தனியார் துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் கணேசன் கூறினார்.சேலம், கோரிமேட்டில் உள்ள, அரசு ஐ.டி.ஐ., மற்றும் தொழில்-நெறி வழிகாட்டும் மையத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள், உட்கட்டமைப்பை, தொழி-லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நேற்று பார்வையிட்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: மாணவர்கள் முன்னேற்றத்துக்கு அரசு ஐ.டி.ஐ.,க்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்-பட்டுள்ளன. வேலைவாய்ப்புக்கு, 2,877 கோடி ரூபாய் மதிப்பில், 72 அரசு ஐ.டி.ஐ.,க்களில் நவீன இயந்திரங்களை கொண்ட, தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டில் தமிழக அரசு ஐ.டி.ஐ.,க்களில் படித்த, 2,700 மாணவர்களில், 2,300 பேருக்கு பல்வேறு தனியார் துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், 3 ஆண்டுகளில் நடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்-கேற்ற, 2,879 பேரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், 531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம், 12,000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து தளவாய்பட்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனையை பார்-வையிட்டு ஆலோசனை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள் உள்பட பலர் பங்-கேற்றனர்.--