உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது

கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது

மேட்டூர்: மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, தேங்கல்வாரையை சேர்ந்தவர் கண்ணன். வி.சி., நிர்வாகி இவரது மனைவி சித்திக் சோபியா, 47. அருகே உள்ள மயான தெருவை சேர்ந்த, மாத பத்திரிகை நிருபர் மாதேஷ், 51. சித்திக் சோபியா, மாதேஷ் இடையே, பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கண்ணன் மாட்டிறைச்சி கடை நடத்துகிறார். அதுகுறித்து பத்திரிகையில் போடாமல் இருக்க, மாதேஷ், அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு மாதம், 5,000 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. கடந்த மாதம் கண்ணன் பணம் கொடுக்காததால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த, 12 இரவு, 9:30 மணிக்கு சோபியா வீட்டுக்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த குமார், குடிநீரை குழாய் போட்டு, மாதேஷ் வீட்டில் பிடிப்பதாக கூறியுள்ளார். அதை சுட்டிக்காட்டி கேட்ட கவுன்சிலர் சோபியாவை, மாதேஷ், அவரது மகன்கள் தமிழரசன், தமிழ்ராஜ் ஆகியோர் தாக்கியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அஜித்குமார், சம்பத் கேட்க, அவர்களையும் மாதேஷ் தாக்கியுள்ளார். காயம் அடைந்த சோபியா அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் நேற்று மாதேைஷ கைது செய்து அவரது மகன்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை