உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழக எல்லை காவிரியில் மீண்டும் மணல் கடத்தல்

தமிழக எல்லை காவிரியில் மீண்டும் மணல் கடத்தல்

மேட்டூர்: தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாற்றில் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் மணல் கடத்தல் துவங்கியுள்ளது.கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரியாறு தமிழக - கர்நாடகா எல்லையில், 60 கி.மீ., பாய்ந்து செல்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது காவிரிப்படுகையில் மணல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரியில் தேங்கும். கோடைகாலம் தொடங்கியதால், தற்போது காவிரி நீர்வரத்து வினாடிக்கு, 23 கனஅடியாக குறைந்து விட்டது.மேட்டூர் அணை நீர்மட்டமும் நேற்று, 59.98 அடியாக சரிந்து விட்டதால் நீர்பரப்பு பகுதி வறண்டு விட்டது. அதை சாதகமாக பயன்படுத்தி தமிழக எல்லையில் உள்ள செட்டிப்பட்டி, கோட்டையூர் பகுதியில் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது.அதற்காக பெரிய பரிசல்களை காவியாற்றில் நிறுத்தி மீனவர்கள் நீரில் மூழ்கி மணலை சேகரிக்கின்றனர். பின் மணலை பரிசலில் கொண்டு வந்து காவிரி கரையோரம் இருப்பு வைத்து டிராக்டரில் கட்டுமான பணிகளுக்கு சப்ளை செய்கின்றனர். ஒரு மாதமாக மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: காவிரியில் சில ஆண்டுகளாக மணல் கடத்தலை தடுக்க, கடத்தல் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் மணல் கடத்தல் கட்டுக்குள் வந்தது. இரு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. ஒரு டிராக்டர் மணல், 10,000 ரூபாய்க்கு சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு நேரடியாக ஓட்டி சென்று இறக்கப்படுகிறது. பாறைகளை கிரஷர்களில் உடைத்து பொடியாக்கும், பி.சாண்ட் ஒரு யுனிட், 7,000 முதல், 7,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பி.சாண்டை விட மணல் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் அதை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க, கொளத்துார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேனில் காவிரியாற்றில் மணலுக்கு பதில் பாறை திட்டுகளாக மாறும் அபாயம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை