உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு

சேலம்: சேலத்தில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.ஆடி மாதத்தின் நிறைவாக, வரலட்சுமி நோன்பு எனப்படும் வர-லட்சுமி விரத பூஜை வீடுகளிலும், கோவில்களிலும் நடப்பது வழக்கம். விரதம் மேற்கொள்வதால் குடும்பத்தில் வறுமை நீங்கும், திருமணத்தடை இருக்காது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று பெண்கள் வீடுகளில் லட்சுமியின் முகத்தை வைத்து பூஜை செய்தனர், உறவினர்களுக்கு சுமங்கலி தாம்பூலம் வழங்கினர்.இல்லங்களில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோவில்களுக்கு சென்று பூஜை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரெங்கநாதர் கோவிலில் வரலட்சுமி பூஜை நடந்தது. நேற்று காலை ஏராள-மான பெண்கள், லட்சுமி முகம் பதியப்பட்ட துளசி மடத்தில் மஞ்சள், குங்குமம், விரத கயிறு, பூக்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். பிறகு பெண்களே தீபாராதனை காண்பித்து, துளசிமாடத்தில் பூஜையில் வைக்கப்பட்ட விரத கயிற்றை கோவில் முன் அமர்ந்து கட்டிக்கொண்டனர்.* வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மனுக்கு பாலாபிஷேகம், சந்தனம், இளநீர், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் அன்னபூரணி அலங்காரத்தில் சின்னமாரியம்மன் அருள்-பாலித்தார்.* ஆத்துார், கோட்டை பகுதியில் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத கடைசி வெள்ளி, வரலட்சுமி விர-தத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது, துர்க்கை அம்மன் சன்னதி முன், ராகு கால நேரத்தில், 300க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு, வளையல், குங்குமம், மஞ்சள், ஜாக்கெட் துணி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்