தலைவாசல் : தலைவாசல் அருகே, வி.கூட்ரோடு, கால்நடை பூங்கா பகுதியில், எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், ஸ்ரீராஜமுருகா சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்பட்டு வருகிறது.நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில், ஸ்ரீராஜ முருகா சி.பி.எஸ்.இ., பள்ளி, சேலம் கிழக்கு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. மாணவி லலிதாம்பிகை, 482 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர் கணியமுதன், 478 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவர் ஹரிஷ், 472 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பெற்றுள்ளார். கணித பாடத்தில், இருவர் 100க்கு 100 மதிப்பெண்கள்; தமிழ் மற்றும் சமூக அறிவியலில், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய, 34 மாணவர்களில், 450க்கு மேல் ஒன்பது பேர்; 400க்கு மேல். 16 மாணவர்கள் என, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி தலைவர் சக்திவேல், செயலர் சோலைமுத்து, பொருளாளர் ராமலிங்கம், துணைத் தலைவர் சண்முகம், இணைச் செயலர் நாகராஜன், பள்ளி முதல்வர் பிரியா, துணை முதல்வர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.