உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்டார்ட் செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்

ஸ்டார்ட் செய்தபோது காரில் தீ ;சர்வீஸ் கடைக்காரர் தப்பினார்

சேலம்;சேலம், குரங்குச்சாவடி அருகே நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 57. இவர் அதே பகுதியில் கார்களுக்கு கண்ணாடி சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். அவரது வீடு முன் நிறுத்தியிருந்த, 'மாருதி' காரை, நேற்று காலை, 'ஸ்டார்ட்' செய்தார். அப்போது தீப்பற்றி எரிந்தது. உடனே காரில் இருந்து வெளியேறினார். அவர் தகவல்படி சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கார் சேதமானது. இன்ஜின் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை