உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 ஆண்டாக திறக்கப்படாத சுகாதார வளாகம்

4 ஆண்டாக திறக்கப்படாத சுகாதார வளாகம்

மகுடஞ்சாவடி,மகுடஞ்சாவடி, கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அப்பகுதி மக்களுக்கு, 2020 - 21ல், 15 வது மாநில நிதிக்குழு மானியம் உள்பட, 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அந்த வளாகம் கட்டி இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பெண்கள், இயற்கை உபாதை கழிக்க, மறைவான இடத்துக்கு செல்லும் அவலம் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதார வளாகத்தை திறக்க, மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து கண்டர்குலமாணிக்கம் தலைவி பிரியா கூறுகையில், ''ஏரி தண்ணீர், கழிப்பறை குழியில் தேங்கியிருந்தது. தற்போது வடிந்து வருகிறது. விரைவில் சுகாதார வளாகம் திறக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை