உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

ஆத்துார்: புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துார் அருகே, காட்டுக்கோட்டை ஊராட்சி, ஏழாவது வார்டு பகுதியில், சாலையோரம் புளிய மரங்கள் உள்ளன. அதில் ஒரு புளிய மரம் நேற்று காலை, 10:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், அரை மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். புளிய மரத்துக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ