உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிதி கிடைக்கவில்லை மத்திய அரசு மீது தொ.மு.ச., குற்றச்சாட்டு

குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிதி கிடைக்கவில்லை மத்திய அரசு மீது தொ.மு.ச., குற்றச்சாட்டு

சேலம்: தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின், 2வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. தொ.மு.ச., பேரவை, அகில இந்திய அமைப்பு செயலர் வேலு சுவாமி தலைமை வகித்தார். பொதுச்செயலர் சண்முகம், சேலம் மண்டல தலைவரான, தி.மு.க.,வின், சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசினர்.அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக அறிவித்து பணி நிரந்தரப்படுத்தல்; காலமுறை ஊதியம் வழங்குதல்; குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய்; உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்ற பணியாளர்கள், உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்குதல் உள்பட, 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின் சண்முகம் கூறியதாவது:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு பங்களிப்பு, 60 சதவீதம்; மாநில அரசு நிதி, 40 சதவீத பங்களிப்பாக உள்ளது. 1 முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு எதன் அடிப்படையில், 60 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது என தெரியவில்லை. ஒதுக்கீடு நிதி முழுமையாக கிடைக்காததால் அதை தமிழக அரசு ஈடு செய்து வருகிறது. நிறைவேற்றப்பட்ட, 30 தீர்மானங்களை செயல்படுத்த சமூக நலத்துறை அமைச்சர், முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.அகில இந்திய பொருளாளர் நடராசன், மாநில பொருளாளர் கோமளா, பேரவை செயலர் பாரி, சேலம் மாவட்ட கவுன்சில் தலைவர் மணி, செயலர் பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை