உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காசநோய் விழிப்புணர்வு பேரணி

காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஆத்துார்:உலக காசநோய் தினத்தையொட்டி ஆத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று, விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் கணபதி, இந்திய மருத்துவ சங்க நிர்வாகி செங்குட்டுவன் தொடங்கி வைத்தனர். ஆத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, காமராஜர் சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை வழியே புனித சூசையப்பர் பள்ளியில் நிறைவு பெற்றது. அப்போது, 'காசநோயை ஒழிப்போம், மனிதத்தை காப்போம்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்களை அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்று விழிப்புணர்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ