உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 123ம் ஆண்டாக ரதி மன்மதன் விழா

123ம் ஆண்டாக ரதி மன்மதன் விழா

தாரமங்கலம்:தாரமங்கலம், பழைய சந்தைப்பேட்டையில், 123ம் ஆண்டாக ரதி மன்மதன் திருவிழா நேற்று நடந்தது. அதன் தொடக்கமாக கடந்த, 13ல் கொட்டமுத்து செடி, கரும்பை நட்டு வைத்து வணங்கி வந்தனர். இதில் பொம்மைகளை வைத்து ரதி மன்மதனாக பாவித்து நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து, கொட்டமுத்து செடி, கரும்பை மன்மதனாக வைத்து அதை சிவன் நெற்றிக்கண்ணில் எரிப்பது போன்று, காமன் தகன நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இன்று அஸ்தி கரைப்பு, நாளை மொச்சை சேகரித்தல், வரும், 27ல் மன்மதனை எழுப்புதல், சிவலிங்க பூஜையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ