உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது

2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது

சேலம்: சேலத்தில், 2.75 டன் ரேஷன் அரிசியை கடத்தியதால், 3 சரக்கு வேன்களுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, பழைய சூரமங்கலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அங்கு நிறுத்தியிருந்த, 3 சரக்கு வாகனங்களை எடுக்க முயன்றனர். உடனே தடுத்து போலீசார் விசாரித்தனர்.அதில் பழைய சூரமங்கலம், காமராஜர் தெருவை சேர்ந்த சூர்யா, 39, மாணிக்கம், 38, பெரியபுதுார் ஏரிக்காடு ரவி, 40, பரமசிவம், 43, என தெரிந்தது. மேலும் வாகனங்களில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, 3 வாகனங்களுடன் அதில் கடத்தி வந்த, 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சூர்யா உள்பட, 4 பேரை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தொழிலுக்கு, 3 சரக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கிய சூர்யா, மாணிக்கம் உதவியுடன் சூரமங்கலம் அதன் சுற்றுப்பகுதிகளில் வீடுதோறும் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, அதை கோழி, மாட்டுப்பண்ணைகள், முறுக்கு வியாபாரிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்தனர். இதில் ஏற்கனவே அரிசி கடத்திய, 2 வழக்குகள், சூர்யா மீது உள்ளதால் அவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை