உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது

1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது

சேலம், சேலம், அன்னதானப்பட்டி போலீசார், நேற்று, சீலநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர், சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், மல்லுார், வெற்றி நகரை சேர்ந்த குமார், 34, பாரப்பட்டி, கொட்டாய்வளவு பழனிவேல், 32, ஜீவா, 35, சரக்கு ஆட்டோ உரிமையாளரான, வாழக்குட்டப்பட்டியை சேர்ந்த இளவரசன், 30, என தெரிந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், 41 மூட்டைகள் கொண்ட, 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், மக்களிடம் அரிசியை வாங்கி, மல்லுாருக்கு கடத்த முயன்றது தெரிந்தது. மேலும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ