தாரமங்கலம்: ஒரே மொபட்டில், 4 சிறுவர்கள் சென்ற நிலையில் நிலை தடு-மாறி இரும்பு தடுப்பில் மோதியதில், 10ம் வகுப்பு மாணவர் உயி-ரிழந்தார்.சேலம், அழகாபுரம், பெரிய புதுாரை சேர்ந்த, தனசேகரன் மகன் தமிழ்மாறன், 16. அழகாபுரம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். இவர் நேற்று முன்தினம், அவருடன் படிக்கும், அதே ஊரை சேர்ந்த, 3 மாணவர்களுடன், 'ஆக்டிவா' மொபட்டில், தார-மங்கலம், அணைமேடு ராஜமுருகன் கோவிலுக்கு சென்றனர்.தொடர்ந்து மொபட்டில், 4 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் தமிழ்மாறன் வேகமாக ஓட்டிச்-சென்றார். மாலை, 4:00 மணிக்கு, பவளத்தானுார் ரவுண்டானா அருகே வந்தபோது நிலை தடுமாறியதில், சாலை இடது புறம் உள்ள இரும்பு தடுப்பில், மொபட் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த தடுப்பில், தமிழ்மாறனின் மார்பு பகுதி பட்டு, பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள், பின்புறம் அமர்ந்து வந்ததால், லேசான காயங்களுடன் தப்பினர். மக்கள், தமிழ்மா-றனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'ஒரே மொபட்டில், 4 சிறுவர்கள் பய-ணித்தது, சிறுவனே ஓட்டியது, ஹெல்மெட் அணியாதது உள்-ளிட்ட விதிமீறல்களால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது' என்றனர்.