உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

சேலம், சேலம், சூரமங்கலம், பத்மாவதி காலனியை சேர்ந்தவர் தஞ்சாயி அம்மாள், 85. நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டில் தனியே இருந்தார். அப்போது உறவினர் எனக்கூறி, 35, 30 வயது முறையே ஆண், பெண் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின் மூதாட்டி கவனத்தை திசைதிருப்பி, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பீரோவில் இருந்த நகையை காணாததால், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் நடராஜன், 71, என்பவரிடம் தெரிவித்தார். அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை