உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிதி நிறுவன ஆவண அறையில் தீ விபத்து

நிதி நிறுவன ஆவண அறையில் தீ விபத்து

ஆத்துார்: ஆத்துார், தாயுமானவர் தெருவில், தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அங்கு வீடு, நகை கடன், அடமானம், வாகனம், தனி நபர் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடன் தொகைக்கு ஆவணங்களை பெற்று, அந்நிறுவன வளாகத்தில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, 9:00 மணிக்கு ஆவண பாதுகாப்பு அறையில் தீப்பற்றியது.தகவலறிந்த ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், இரவு, 9:10 மணிக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அறையில் புகையாக உள்ளதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து முயற்சித்து தீயை அணைத்தனர். ஆவண சேதம் குறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து நிதி நிறுவன இயக்குனர் கண்ணன் கூறுகையில், ''மின் கசிவால் குடோன் பகுதியில் வைத்திருந்த பழைய காலண்டர் அட்டை உள்ளிட்ட கழிவு பொருட்கள் எரிந்தன. இரும்பு பீரோவில் ஆவணங்கள் இருந்ததால் சேதமாகவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை