உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதை வனப்பகுதியில் சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

மலைப்பாதை வனப்பகுதியில் சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

ஏற்காடு, சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு வரும் வனப்பகுதியில், 20 கி.மீ.,க்கு மலைப்பாதை உள்ளது. அதில், 40 அடி பாலம் அருகே உள்ள வனப்பகுதியில் துர்நாற்றத்துடன் சூட்கேஸ் கிடந்தது. நேற்று காலை, ரோந்து பணியில் ஈடுபட்ட வன காவலர், ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அங்கு வந்த எஸ்.பி., அருண் கபிலன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள், கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.சூட்கேசை திறந்து பார்த்ததில் பெண் சடலம் இருந்தது. தொடர்ந்து அந்த சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இறந்த பெண்ணுக்கு, 20 முதல், 25 வயது இருக்கும் என்றும், அவர் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ