உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை

அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை

வனவாசி: வனவாசி அரசு பாலிடெக்னிக்கில் வரும், 31 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதுகுறித்து வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் அறிக்கை:சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாண்டு மாணவர் சேர்க்கை, இணைய தளம் வழியே வரும், 31 வரை நடக்கும் என, தழிழக அரசின் தொழில்நுட்ப இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு கடந்த மே, 10ல் தொடங்கியது. பட்டய படிப்பில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னணுவியல், மின்னியல் மற்றும் கணினிப்பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேர, 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிப்போர், www.tnpoly.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம், 150 ரூபாயை, பதிவுதாரர், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை