சேலம்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்-சிலர்கள் பேசியதாவது:மண்டல குழு தலைவர் அசோகன்(தி.மு.க.,): மாநகராட்சி புது வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க குழு அமைத்து பரிசீலனை செய்ய வேண்டும்.கவுன்சிலர் தெய்வலிங்கம்(தி.மு.க.,): மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் விஷப்பூச்சிகளால் அருகே வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி மனைகளுக்கும் வரி விதிக்க வேண்டும்.எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ்(அ.தி.மு.க.,): பாதாள சாக்-கடை உள்ளிட்ட புது வரி, சொத்து வரி, குப்பை வரி, வணிக வரி உள்ளிட்ட மாநகராட்சியின் வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்-பட்டுள்ளனர். வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்டால், மேயர் அல்லது கமிஷனர் பதில் சொல்ல வேண்டும். கவுன்சிலர்கள் சொல்லக்கூடாது.அப்போது அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்-குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அ.தி.மு.க., பகுதி செயலர் சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற, எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. பின் அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள், கோரிக்கைகள் குறித்து பேசிய நிலையில், அதற்கு பரிசீலித்து நிறைவேற்றுவதாக, மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார். கமிஷனர் ரஞ்ஜீத் சிங், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.காலைக்கதிரை சுட்டிக்காட்டி...சேலம், சத்திரம் அம்மா உணவகத்தில் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. அங்கேயே குப்பை வண்டிகள் நிறுத்தப்பட்டுள்-ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவில், 'பார்' ஆக மாறி விடுகிறது. இதுகுறித்து காலைக்கதிர் நாளிதழில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இதை காட்டி, மாநகராட்சியில் நடந்த கூட்-டத்தில், எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கேள்வி எழுப்-பினார். இதற்கு மேயர் ராமச்சந்திரன், 'ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதில் அளித்தார்.