உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.6 கோடி வாங்கிவிட்டு தம்பதி தலைமறைவு கடன் கொடுத்தவர்கள் மீண்டும் போலீசில் புகார்

ரூ.6 கோடி வாங்கிவிட்டு தம்பதி தலைமறைவு கடன் கொடுத்தவர்கள் மீண்டும் போலீசில் புகார்

ஆத்துார்:ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை எம்.பி., நகரை சேர்ந்தவர் பாண்டியன், 50. இவரது மனைவி வளர்மதி, 40. இவர்கள் ஜவுளி வியாபாரம், பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்தனர். இதற்கு காட்டுக்கோட்டை மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்துாரை சேர்ந்தவர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோரிடம், 6 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஓராண்டுக்கு மேலாக, அசல், வட்டியை தரவில்லை. 6 மாதங்களுக்கு முன், பாண்டியன், வளர்மதி குடும்பத்துடன் தலைமறைவாகினர்.பணத்தை கொடுத்தவர்கள், கடந்த பிப்ரவரியில், சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால், காட்டுக்கோட்டையில் உள்ள வளர்மதியின் தம்பி செந்தில், 35, என்பவரை, பணம் கொடுத்த நபர்கள் அழைத்துவந்து, ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஒப்படைத்தனர். தொடர்ந்து, வளர்மதி, பாண்டியன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தரக்கோரி, போலீசில் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்