சேலம், சேலம், அண்ணா பார்க் எதிரில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவமனையான, லண்டன் ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனையின் ஆண்டு விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து மருத்துவ முகாம் நடந்தது.இடுப்பு. முதுகு வலி, மூட்டு ஜவ்வு, தோள்பட்டை ஜவ்வு, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்னைகளுக்கு ஆர்த்தோ மருத்துவர்கள், பிசியோதெரபி நிபுணர்கள் இலவசமாக பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு ஏற்படும் காயங்கள், மூட்டு வலி மற்றும் பலவித சிகிச்சைகளுக்கு லண்டன் ஆர்த்தோ ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். இதுவரை, 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள், முதியோர் சேர்ந்துள்ளனர்.டாக்டர் ஆதித்சுகவனம் தலைமையில், நவீன மேம்படுத்தப்பட்ட தோள்பட்டை ஆர்த்ரோஸ்கோபிக் ஸ்கோப் மற்றும் சிறப்பு சிகிச்சை உலகத்தரத்துடன் இங்கு வழங்கப்படுகிறது. இதுவரை, 10,000க்கும் மேல் மூட்டுகளுக்கு சிகிச்சை, 20,000க்கும் மேல் ஆர்தோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.சிஎம்சி வேலுார், லண்டன், கோவை கங்கா மருத்துவமனைகளில் பணி புரிந்த சீனியர் மருத்துவர் சுகவனத்தின், சீரிய தலைமையில் மருத்துவ குழு சிறப்பாக செயல்பட்டு இந்த சேவையை வழங்கி வருகின்றனர். வெளியூர்களுக்கு அலைந்து, அதிக பணம் செலவு செய்து பல நாட்கள் தங்குவதை தவிர்த்து, உள்ளூரிலே உலகத்தர சிகிச்சையை இங்கு பெறலாம் என, சிறப்பு மருத்துவர் சுகவனம் தெரிவித்தார்.