உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே குடும்பத்தில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம்: ஒரே குடும்பத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்ற நிலையில், ஆவணமின்றி நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை விடுத்தனர்.சேலம், கந்தம்பட்டி பைபாஸ் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன், 75. இவர், குடும்பத்தினர், 7 பேருடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். உடனே மண்ணெண்ணெய் ஊற்றி, 8 பேரும் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து மீட்ட போலீசாரிடம், பச்சையப்பன் கூறியதாவது:சேலம் இட்டேரி சாலையில், எங்களது, 35 சென்ட் நிலத்தை, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வினோத், அவரது பெயருக்கு எழுதிக்கொண்டார். அத்துடன் கம்பி முள்வேலி அமைத்துக்கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது அவர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அவரிடமிருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.சூரமங்கலம் போலீசார் கூறுகையில், 'முதல்வர் தனி பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு விசாரணைக்கு வந்தது. அதில், 35 சென்ட் நிலம் என்பது தவறு. 20 சென்ட் தான் உள்ளது. அதற்கு மூலப்பத்திரம் உள்பட எல்லா ஆவணங்களும் வினோத்திடம் உள்ளன. அதேநேரம் நிலம் தொடர்பான எந்த ஆவணமும் பச்சையப்பனிடம் இல்லை. நீதிமன்ற தீர்ப்பும் வினோத்துக்கு ஆதரவாக உள்ளது' என்றனர்.வினோத் கூறுகையில், ''நிலம் வாங்கிய, 2021ல் இருந்து பச்சையப்பன் பிரச்னை செய்து வந்தார். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சேலம் ஆர்.டி.ஓ.,வும் நில ஆவணங்களை சரிபார்த்துவிட்டார். எல்லா ஆவணங்களும் முறையாக உள்ளன. இருப்பினும் பச்சையப்பன் பிரச்னை செய்வதால் இனி போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை