உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருவ மழை குறித்து விழிப்புணர்வு

பருவ மழை குறித்து விழிப்புணர்வு

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து செயல்விளக்க முகாம் நடந்தது. பள்ளி மாணவ, மாணவியருக்கு, வடகிழக்கு பருவ மழையின்போது கடைபிடிக்கும் வழிமுறைகள், தீயணைப்பு துறையின் மீட்பு பணிகள், தீ தடுப்பு குறித்து செயல்விளக்கத்துடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.* கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது வீட்டினுள் நேற்று மதியம், 2:00 மணியளவில், பாம்பு இருப்பதாக கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மூன்று அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை