உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆறுமுக வேலனுக்கு அழகு மயில் காவடி!

ஆறுமுக வேலனுக்கு அழகு மயில் காவடி!

இடைப்பாடி: 'ஆறுமுக வேலனுக்கு அழகு மயில் காவடி' என பாடி ஆடியபடி, இடைப்பாடியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர், பல்வேறு குழுக்களாக காவடி கட்டி பழநிமலைக்கு நடைபயணம் செல்வர். அவர்களுக்கு உணவு சமைக்க, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வாகனங்கள் செல்லும். குறிப்பாக, ஆலச்சம்பாளையம் மக்கள், மாட்டு வண்டியிலேயே பொருட்களை எடுத்து கொண்டு செல்வர். அதன்படியே நேற்று முன்தினம் ஆலச்சம்பாளையத்தை சேர்ந்த முருக பக்தர்கள், மாட்டு வண்டிகள், வாகனங்கள் மூலம் பழநிக்கு நடைபயணமாக புறப்பட்டனர். பலரும் காவடி எடுத்துச்சென்றனர். அப்போது, 'ஆறுமுக வேலனுக்கு அழகு மயில் காவடி; வண்ண வண்ண காவடி வெற்றிவேலன் காவடி' என்ற பாடல்களை பாடி ஆடியபடி சென்றனர்.அவர்கள் நாளை மறுநாள் காலை பழநி அருகே பாலாற்றில் காவடிகளுக்கு பூஜை வைத்து, அன்று மதியம் பழநி மலையில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து காவடிகளில் கொண்டு சென்ற சர்க்கரையால் பஞ்சாமிர்தம் தயாரித்து, பக்தர்களுக்கு வழங்க உள்ளனர். அதேபோல் நேற்று வெள்ளாண்டிவலசு சமுதாய மக்கள், வாகனங்களில் பொருட்களை எடுத்துக்கொண்டு பழநிக்கு நடைபயணம் புறப்பட்டனர். இவர்களும் வரும், 29ல் பழநி அருகே பாலாற்றில் காவடிகளுக்கு பூஜை வைத்து அன்று மதியம் பழநி முருகனுக்கு பூஜை செய்துவிட்டு, மறுநாள் இடைப்பாடிக்கு திரும்ப உள்ளனர். இதேபோல் தொடர்ந்து பல்வேறு குழுவினர், இடைப்பாடியில் இருந்து, காவடிகளுடன் நடைபயணமாக தொடர்ந்து செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ