உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தில் கார் மோதி இளைஞர் பலி

மரத்தில் கார் மோதி இளைஞர் பலி

இடைப்பாடி : கொங்கணாபுரம் அருகே, சாலையோர தென்னை மரத்தில் கார் மோதி இளைஞர் பலியானார்.கொங்கணாபுரம் அருகே, ஏரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முத்துராம்கரண், 25, படித்து முடித்து வேலை தேடி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சொந்த வேலையாக வெளியில் சென்று விட்டு, இளம்பிள்ளையில் கொங்கணாபுரம் வழியாக வேல்ஸ்வேகன் காரில் திரும்பி கொண்டு இருந்தார்.வடுகப்பட்டி தெற்கு காடு-3 ரோடு பகுதியில் கார் சென்றபோது, சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. முத்துராம் கரணுக்கு, நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு காருக்குள்ளேயே இறந்துள்ளார்.அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தபடி, கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி