உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சேலத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சேலம் : சேலம் மாநகர பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அன்பரசு, இரும்பாலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயதேவி ஆகியோர் கோவை சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, பவானி இன்ஸ்பெக்டர் இளவரசி, சேலம் கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் பேபி, சேலம் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் இந்திராணி, சேலம் டவுன் மகளிர் இன்ஸ்பெக்டர் வாசுகி, கோவை ரேஸ்கோர்ஸ் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா ஆகியோர் சேலம் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கோவை சிட்டிக்கும், காங்கேயம் மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரா, கோவை மதுக்கரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கோபி, மகளிர் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், திருப்பூர் எஸ்.எஸ்.டி., இன்ஸ்பெக்டர் பாபு, சேலம் மாவட்டம் கொடுங்குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் குமார், கிருஷ்ணகிரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சிவகாமி, துடியலுார் இன்ஸ்பெக்டர் விதுன் குமார், கோவை ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் சேலம் மாநகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.சேலம் மாநகர ஏ.ஆர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன், காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஈரோடு தெற்கு போக்குவரத்து பிரிவு ராமராஜ், கோபி போக்குவரத்து பிரிவு கனகவேல் ஆகியோர் சேலம் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை ஏ.ஆர். இன்ஸ்பெக்டர்கள் ஜெயவேல், கிட்டு ஆகியோர் சேலம் மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி., பவானீஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை