மேலும் செய்திகள்
சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
28-Dec-2025
அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்
28-Dec-2025
இன்று விழிப்புணர்வு மாரத்தான்
28-Dec-2025
வாகனம் மோதி முதியவர் பலி
28-Dec-2025
கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே தெடாவூர், தெற்கு மணக்காட்டை சேர்ந்தவர் உதயகுமார், 38. இவரது டிராக்டரை, அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கரன், 27, என்பவர், அண்ணாமலை என்பவர் தோட்டத்தில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை ஏற்றி வர, டிராக்டர் டிரைலருடன் வந்தார். அப்போது மக்காச்சோளத்தை காயவைக்க, தார்பாய் எடுத்து வர, அதே ஊரைச்சேர்ந்த கார்த்தி வீடு எதிரே, டிராக்டரை நிறுத்திவிட்டு அண்ணாமலை தோட்டத்துக்கு சென்றார். மீண்டும் வந்த அவர், டிராக்டரை ஓட்ட முயன்றபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த, கார்த்தியின், 1 வயது மகன் குரு, டிராக்டர் டயரில் சிக்கியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையை படுகாயத்துடன் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார், சிவசங்கரன் மீது வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025