உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அரசை கண்டித்து கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

வீரபாண்டி: மழை, வெள்ளம் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய அரசை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டையாம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்திய கம்யூ., கட்சி பனமரத்துப்பட்டி, வீரபாண்டி கிளை சார்பில், ஒன்றிய செயலர்கள் பாலன், ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைந்திந்திய மாணவர் சங்க மாநில செயலர் தினேஷ் சிறப்பாளராக பங்கேற்றார்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க பெற தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என, மாநில செயலர் தினேஷ் கேட்டுக்கொண்டார்.* ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நங்கவள்ளி ஒன்றிய செயலர் ஜீவானந்தம் தலைமையில் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ள பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்கக் கூடாது, சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இடைப்பாடி ஒன்றிய செயலர் சுப்ரமணி, சங்ககிரி ஒன்றிய செயலர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை