உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிடப்பில் அறிவுசார் மைய பணி வீணாகும் கட்டுமான பொருட்கள்

கிடப்பில் அறிவுசார் மைய பணி வீணாகும் கட்டுமான பொருட்கள்

வாழப்பாடி: வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் அறிவு சார் மையம் அமைக்க கடந்த மார்ச்சில் பூஜை போடப்பட்டது.தொடர்ந்து ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டு, கட்டு-மான பொருட்கள் குவிக்கப்பட்டன. தரைத்தளம் கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணி நடந்தது. ஆனால் ஆகஸ்டில், விளையாட்டு மைதானம் பாதிக்கப்படுவதாக சிலர் எதிர்ப்பு தெரி-வித்தனர்.இதையடுத்து அப்பள்ளியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பின்புறம் உள்பட, 3 பகுதிகளில், அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடத்தை, சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார் ஆய்வு செய்தார். பின், 4 மாதங்களாக இடத்தை தேர்வு செய்-யாமல், அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் அதற்கு வாங்கிய கம்பிகள், வெயிலில் துருப்பி-டித்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன. மண், ஜல்லி கற்களும் வீணாகிறது. அத்திட்டத்தையும் செயல்படுத்த-வில்லை. இதனால் உடனே இடத்தை தேர்வு செய்து, அறிவுசார் மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ