உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

இடைப்பாடி, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. 19 மூட்டை கொப்பரைகள் கொண்டுவரப்பட்டன. கொப்பரை முதல் தரம் கிலோ, 163 முதல், 196 ரூபாய்; இரண்டாம் தரம், 120 முதல், 130 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.12 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதேபோல் ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. 45 மூட்டைகளில் கொண்டு வரப்பட்டன. கிலோ, 80.25 முதல், 210.19 ரூபாய் வரை ஏலம் கோரினர். 11.94 குவிண்டால் மூலம், 2,18,836 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ