உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

ஆத்துார்: ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 68. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். அதே பகுதியில் வசிக்கும் முத்துசாமி குடும்பத்தினர், அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, குத்தகை முறையில் விவசாயம் செய்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு, முத்துசாமி, 65, அவரது மகன் பூமாலை, 35, ஆகியோர், அங்குள்ள ஓடை வாய்க்காலை சேதப்படுத்தினர். இதுகுறித்து கணேசன், 68, அவரது மனைவி தமிழ்செல்வி, 48, மைத்துனர் தமிழ்வேந்தன், 52, தட்டிக்கேட்டுள்ளனர்.இதில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூமாலை, முத்துசாமி ஆகியோர், அரிவாளால் வெட்டியதில் கணேசன், தமிழ்செல்வி, தமிழ்வேந்தன் காயம் அடைந்தனர். இதில் கணேசனின் இடது கையில், 3 விரல்கள் துண்டாகி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் கணேசன் தரப்பினர் தாக்கியதாக முத்துசாமி, அவரது மகள் வளர்மதி, 34, ஆகியோரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துார் ஊரக போலீசார், இரு தரப்பு புகார்படி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி