உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு காப்பு

வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு காப்பு

ஏற்காடு : ஏற்காடு வடக்கு வனச் சரக வனவர் ராஜேஷ்குமார், வனக்காப்பாளர் லட்சுமிகாந்த், கடந்த பிப்., 26ல், அரங்கம் அருகே வனப்பகுதியில் இரவு ரோந்து முடித்து, காலை, 8:30 மணிக்கு அரங்கத்துக்கு வந்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாசலம், 43, கரியமலை, 58, ஆகியோர், ராஜேஷ்குமாரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளில் திட்டி பணிபுரிய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜேஷ்குமார் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரித்து, நேற்று அருணாசலம், கரியமலையை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், ''ஒரு மாதத்துக்கு முன் வனப்பகுதியில் ஆட்டுக்கால் கிழங்கு தோண்டி எடுத்துச்சென்றபோது வனவர் ராஜேஷ்குமார், அருணாசலத்தை பிடித்து, 30,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதை மனதில் வைத்து வாக்குவாதம் செய்து திட்டியது, விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ