உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / "டெங்கு ஷாக்; அதிகாரிகள் "அலர்ட்

"டெங்கு ஷாக்; அதிகாரிகள் "அலர்ட்

சேலம்: தற்போது, டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதை அடுத்து, அதிகாரிகளை அதரடியாக களத்தில் இறக்கி விட்டு, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, அரசு எடுத்து வருகிறது.தமிழகத்தின் பல மாவட்டங்களில், டெங்கு காய்சல் நோய் தாக்குதலால், பலர், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து, உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார பணிகள் மூலமாக, 'டெங்கு' நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 வட்டாரங்களில், டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வட்டாரத்துக்கு, பத்து ஊழியர்கள் வீதம், 20 'பிளாக்'குகளில், 200 அலுவலர்கள் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒரு மருத்துவ அலுவலர், வட்டார மேற்பார்வை சுகாதார அலுவலர், இரண்டு சுகதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு கிராமத்தில், சுகாதாரத்தை பேணிக் காத்திடும் வகையில், ஊழியர்கள் மூலம் முழு வீச்சில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, வீட்டு முன்பாக மழை நீர் தேங்காத வண்ணம் குழிகள் மூடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அதேபோல், உரல், பழைய வண்டி டயர், பிளாஸ்டிக் டப்பா மற்றும் தேங்காய் சரட்டை உள்ளிட்டவைகளில் மழை தண்ணீர் தேங்கி விடாமல், அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.டெங்கு நோய் பரப்பிடும் கொசு, அதிகாலை, 4 மணி அளவில் சுத்தமான மழை நீர் தேங்கியிருக்கும் இடங்களில், முட்டையிடுகின்றன. இந்த முட்டையில் இருந்து வெளிவரும் கொசுக்கள், அதிகாலை வேளையில் மட்டுமே மனிதர்களை கடிக்கின்றன. இவ்வாறு கடிக்கும் கொசுக்கள் மூலம் டெங்கு நோய் பரவி வருகிறது.எனவே, டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை அழித்திட கொசு மருந்து அனைத்து இடங்களிலும் அடித்து, தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி