உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைலாஷ் மானசரோவர் பள்ளி மாணவர் சேர்க்கை

கைலாஷ் மானசரோவர் பள்ளி மாணவர் சேர்க்கை

சேலம்: சேலத்தில், 17 ஆண்டுகால கல்வி அனுபவம் கொண்டுள்ள, ஏ.வி.எஸ்., மற்றும் சக்தி கைலாஷ் கல்விக்குழுமத்தின் இன்னொரு அங்கமாக, உடையாப்பட்டியில், கைலாஷ் மானசரோவர் பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில், உடல், மனம், புத்தி, புலன்கள், நுண்ணறிவு, சுய உதவி, மொழி வளர்ச்சி, சமூகத்திறன்கள், ஆன்ம வளர்ச்சி என ஒன்பது தளங்களில் கல்வியும், செஸ், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கர்நாடக இசை, கிராமிய நடனம், ஓவியம், கல்விசார் சுற்றுலாக்கள், உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளையும் சேர்ந்து வழங்கும் ஒரே பள்ளி இது.விசாலமான வகுப்பறை, நவீன இருக்கைகள், நூலகம், விளையாட்டு மைதானம், பல்வேறு ஆய்வுக்கூடங்கள் சர்வதேச தரத்தோடு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. புதுடில்லி, சி.பி.எஸ்.சி., பாடத்திட்ட வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள இப்பள்ளி, மூன்று சர்வதேச சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது.'திட்டம்- செயல்- பரிசீலனை' என்கிற கோட்பாடு அடிப்படையில், இங்கு, குழந்தைகளே திட்டமிடுதல், திட்டத்தை செயலாக்குதல், அந்த உழைப்பு முடிவுகளில் பிரதிபலித்தல் என்கிற முறையில் கற்பித்தல், எந்த சூழலிலும் மாணவர்களை சலிப்படைய செய்யாததாக அமைந்துள்ளது.தற்போது, எல்.கே.ஜி., முதல் 4ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி