உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூலாம்பட்டி ஸ்டேஷனில்எஸ்.பி., திடீர் ஆய்வுபோலீஸாருக்கு பாராட்டு

பூலாம்பட்டி ஸ்டேஷனில்எஸ்.பி., திடீர் ஆய்வுபோலீஸாருக்கு பாராட்டு

இடைப்பாடி: சேலம் மாவட்டம், பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்டேஷன் பதிவேடு, குற்ற வழக்குகள் விபரம், வழக்குகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த விபரம், அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, போலீஸ் ஸ்டேஷனை பராமரித்தது போன்றவற்றை ஆய்வு செய்தார்.அதில், குற்ற வழக்குகளுக்கு அதிக அளவில் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதற்கும், அடிதடி வழக்குகளை, அதிக அளவில் பதிவு செய்ததற்கும், ஸ்டேஷனை நல்ல முறையில் பராமரிப்பு செய்ததற்கும், சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமி, இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பரமணி, எஸ்.ஐ.,க்கள், போலீஸாருக்கும் பாராட்டு தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில், முன்மாதிரி போலீஸ் ஸ்டேஷனாக உள்ளது எனவும், எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடந்த ஆய்வுக்குப் பின்னர், ஸ்டேஷன் வளாகத்தில், தென்னை மரக்கன்றுகளை நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி