உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுமதியின்றி மண் கடத்தல்: நான்கு டிப்பர் லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்தல்: நான்கு டிப்பர் லாரி பறிமுதல்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், கெஜ்ஜல்நாயகன்பட்டி, நாழிக்கல்பட்டி, பொய்மான் கரடு, பாரப்பட்டி, கோம்பைக்காடு, நல்லியாம்புதூர் உள்ளிட்ட இடங்களில், அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து, சிறு மலைக் குன்றுகள் உள்ளன. இப்பகுதியில், அரசு அனுமதியின்றி, மொரம்பு மண் வெட்டி எடுக்கப்படுகிறது. சில இடங்களில், அனுமதி இன்றி, பட்டா நிலத்தில், அளவுக்கு அதிகமாக பள்ளம் வெட்டி, மொரம்பு மண், செம்மண் ஆகியவை கடத்திச் செல்லப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை, பனமரத்துப்பட்டி அருகே நல்லியாம்புதூர் பகுதியில் இருந்து, அரசு அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திச் சென்ற நான்கு டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை, சேலம் தாலுகா துணை தாசில்தார் ரமேஷ்குமார் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து, சேலம் தாலுகா துணை தாசில்தார் ரமேஷ்குமார் கூறியதாவது:'பர்மிட்' இல்லாமல், மண் அள்ளப்படுவதாக, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதனால், அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற நான்கு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., விதிக்கும் அபராத தொகையை கட்டிய பிறகு, லாரி விடுவிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி