உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., கவுன்சிலர் மனைவி நில அபகரிப்பு புகாரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு

தி.மு.க., கவுன்சிலர் மனைவி நில அபகரிப்பு புகாரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம்: தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சி, 43வது வார்டு கவுன்சிலர் குணசேகரன். இவரது மனைவியும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சரளா, மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார்:என்னுடன் இணைந்து சண்முகம், சுப்ரமணியன், பத்மாவதி, ஜெயலட்சுமி, சுஜாதா, கற்பகம், பரமேஸ்வரி, சீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர், 'அருணா மார்க்கெட்டிங்' நிறுவனத்தை, 2004ல் தொடங்கினோம்.அந்நிறுவன சொத்துகளை தனியாரிடம் அடமானம் வைத்து மீட்கும்போது, பங்குதாரர் ராஜேந்திரன், போலி ஆவணம் தயாரித்து, 11.68 லட்சம் ரூபாய் மதிப்பில், 80 சென்ட் காலி நிலம், 72.19 லட்சம் ரூபாய் மதிப்பில், 55 சென்ட் காலி நிலத்தை, அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.பங்குதாரர்களை ஏமாற்றிய ராஜேந்திரன், அவருக்கு துணையாக இருந்த வெங்கடாசலபதி, வெங்கடேஷ், விஜயராணி, ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போலீசார், ராஜேந்திரன் உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை