உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஏரியில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

தலைவாசல்: தலைவாசல், சார்வாய்புதுாரை சேர்ந்த, விவசாயி நடராஜன், 40. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, விவசாய தோட்டத்-துக்கு ஏரிக்கரை வழியே நடந்து சென்றார். பின் வீடு திரும்ப-வில்லை. நேற்று காலை, 7:30 மணிக்கு ஏரியில் அவரது உடல் கிடப்பதாக, தலைவாசல் போலீசார், ஆத்துார் தீயணைப்பு வீரர்க-ளுக்கு தகவல் கிடைத்தது. 8:00 மணிக்கு அங்கு சென்ற வீரர்கள், உடலை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஏரிக்கரை வழியே நடந்து சென்றபோது, தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி