உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்

வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்

ஆத்துார், ஆத்துார் அருகே கீரிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 40. தகரத்தால் வேயப்பட்ட வீட்டில் வசிக்கிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, வீட்டில் தீப்பற்றி எரிய, கிருஷ்ணன் வெளியேறினார். தீ மளமளவென பற்றி எரிந்தது. இதை அறிந்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் துணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ