| ADDED : மார் 15, 2024 03:42 AM
ஏற்காடு: தமிழகம் முழுதும் டவுன் பகுதிகளில், 'விடியல் பயணம்' பெயரில் மகளிர் இலவசமாக பயணிக்கும்படி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்ல, இலவச பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்று அந்த பஸ் இயக்கத்தை, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற பஸ்சில் பயணித்த பெண்களுக்கு, இலவச பயண சீட்டை வழங்கி, அதே பஸ்சில், எம்.எல்.ஏ., பயணித்தார். இதன்மூலம் ஏற்காட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், மகளிர் இலவசமாக பயணிக்கலாம். இதனால் மலைக்கிராம மகளிர் பயன்பெறுவர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஏற்காடு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.