உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறு சக்தியையும் இறைவன் குறைத்து மதிப்பிடுவதில்லை

சிறு சக்தியையும் இறைவன் குறைத்து மதிப்பிடுவதில்லை

--ஏற்காடு, மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் ஆரோக்கிய சகாயராஜ் அறிக்கை:நீங்கள் செய்வது உதவியோ, இன்னுரையோ, அது மிகச்சிறிதாக கூட இருக்கலாம். ஆனால் பெறுபவருக்கு அது அந்நேரத்தில் அவர்களின் வாழ்வையே மாற்றக்கூடியதாக அமைந்துவிட கூடும்.வீட்டின் ஒரு சிறு பகுதியே கதவு. அதை விட சிறியது பூட்டு. பூட்டை விட சிறியது சாவி. ஆனால் அந்த சிறு சாவி தான் முழு வீட்டை திறக்கிறது. ஆக சிறு ஒன்றின் சக்தியையும் இறைவன் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை.உண்மையான இறை நேசிப்பாளர்களுக்கு, இறைவனின் கட்ட-ளைகள் நல்ல மனிதர்கள் வழி செவியோரம் துாது வரும். சிலர் அதை ஏற்பதாக மொழிவர். ஆனால் அக்கட்டளைப்படி செயல்-பட மாட்டார்கள். ஒரு சிலர் கட்டளையை மறுப்பர். ஆனால் அதை பின்னாளில் செய்து முடிப்பர்.இவ்வாறு சொல்லொன்று செயலொன்று என்று இருப்போருக்கு இறையருள் என்றுமே உணரப்படுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றென வாழ்பவரின் உள்ளத்தில் இறைவன் பிறக்கின்றான். அவர் தம் செயல்களில் ஒளிர்கின்றான். அனைவருக்கும் கிறிஸ்-துமஸ், புத்தாண்டு வாழ்த்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை